கள்ளக்குறிச்சியில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு மகப்பேறு குழந்தைகள் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம், தொலைத் தொடர்புத்துறை சங்கர், நிர்வாகி ஆறுமுகம், ஜெய்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் மகப்பேறு குழந்தைகள் நல துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், கலெக்டர் நிர்ணயம் செய்த தினக்கூலியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகப்பேறு குழந்தைகள் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment