சின்னசேலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 25 January 2023

சின்னசேலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

சின்னசேலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இந்திலி கிராமம் பழையகாலனியை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் ஆண்டவர்(வயது 33). விவசாயியான இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. சுலோச்சனா(30) என்ற மனைவியும், பாவனா(5) என்ற மகளும், அஜித்(4) என்ற மகனும் உள்ளனர். 

அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த ஆண்டவர் சம்பவத்தன்று பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad