கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை.
வடக்குநெமிலி கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை திருக்கோவிலூர் அருகே உள்ள வடக்குநெமிலி கிராமத்தில் குடிநீர் பிரச்சினை நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அருகில் உள்ள அத்தண்டம் மருதூர் அணைக்கட்டு பகுதிக்கு சென்று அங்கு சாலையோரமாக செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உள்ள ஓட்டை வழியாக வீணாக வெளியேறும் தண்ணீரை பிடித்து வந்து பயன்படுத்தி வரும் அவல நிலையில் உள்ளனர்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது வேதனை அளிப்பதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.
எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment