கள்ளக்குறிச்சி சின்னசேலம் ஒன்றியத்தில் 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சின்னசேலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் அன்புமணி மாறன், சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கனந்தல் பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வாழ்த்தி பேசினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா வரவேற்றார்.
இதில் சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்ட 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அட்மா குழு தலைவர் கனகராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment