கள்ளக்குறிச்சி தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரி மாணவர்கள் தேர்வு - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 25 January 2023

கள்ளக்குறிச்சி தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரி மாணவர்கள் தேர்வு

தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரி மாணவர்கள் தேர்வுகடலூரில் நடைபெற்ற மண்டல அளவிலான மல்யுத்த போட்டியில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலியில் டாக்டர் ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த தமிழ்த்துறை இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்கள் சதீஷ்குமார் 74 கிலோ எடை பிரிவிலும், பரசுராமன் 92 கிலோ எடை பிரிவிலும் முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றனர்.

தொடர்ந்து தேசிய அளவிலான மல்யுத்தப்போட்டிக்கும் இவர்கள் தேர்வாகினர். இதையடுத்து இரு மாணவர்களுக்கும் பாராட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர்.குமார், செயலாளர் கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடற்கல்வி இயக்குனர் பாலாஜி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் விக்னேஷ்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad