கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மீண்டும் தினசரி ரயில் சேவை தொடங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.பசல் முஹம்மது கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் வசதிக்காக திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக சென்னை இடையே தினசரி ரயில் சேவை மீண்டும் தொடங்கவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஏ.பசல் முஹம்மது கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஆன்மீக நகரமான திருவண்ணாமலை திருக்கோவிலூருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாட்டவர் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர்.
இதற்க்கு முன்பாக திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக சென்னைக்கு ரயிலை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தார்கள்.
அந்த ரயில் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்த நிலையில் அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டள்ளது. தற்போதைய சூழ்நிலையில் திருவண்ணாமலை - சென்னைக்கு நேரடி ரயில் வசதி இல்லை. விழுப்புரம் அல்லது காட்பாடி வரை சென்றால் தான் சென்னைக்கு சென்றடைய முடியும். இதனால் நேரமும் செலவும் அதிகரிப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
ஆகவே ரயில்வே நிர்வாகம் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த ரயிலை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்- க.சமியுல்லா
No comments:
Post a Comment