கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் உதயமாம்பட்டு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு பயன்படாத அளவுக்கு மிகவும் பழுந்தடைந்துள்ளது..
இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நோயாளிகளை ஏற்றி செல்லும் அவசர ஊர்திகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
இது சம்பந்தமாக கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனுக்கள் அளித்தும் இந்த சாலை இன்னும் சீர் செய்யப்படாமல் உள்ளது.
ஆகவே தமிழ்நாடு அரசும் மாவட்ட ஆட்சியரும் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் அதிகாரிகளுடைய அலட்சியப் போக்கை கண்டித்து விரைவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று A.பசல் முகமது தெரிவித்தார்.

No comments:
Post a Comment