உளுந்தூர்பேட்டையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 300 மேற்பட்டவர்கள் பாமகவில் இணைந்தார்கள். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 8 January 2023

உளுந்தூர்பேட்டையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 300 மேற்பட்டவர்கள் பாமகவில் இணைந்தார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 300 மேற்பட்டவர்கள் பாமகவில் இணைந்தார்கஉளுந்தூர்பேட்டையில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 300 மேற்பட்டவர்கள் பாமகவில் இணைந்தார்கள்.ள்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் முன்னிலையில்,  உளுந்தூர்பேட்டை பொறியாளர் க.சத்யா தலைமையில் பாட்டாளி  மக்கள் கட்சியில் இணைந்தனர்.

தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார், பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் அன்பழகன், கொள்கை விளக்க அணி செயலாளர்  செல்வகுமார், மாவட்ட செயலாளர் மருத்துவர் ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் க.சமியுல்லா.

No comments:

Post a Comment

Post Top Ad