பகண்டை கூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 January 2023

பகண்டை கூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பகண்டை கூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி பொங்கல் கோலம் போட மின்விளக்கு வசதி செய்ய முயன்றபோது பரிதாபம்.


 

பகண்டை கூட்டு ரோடு அருகே உள்ள தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ்(28) தொழிலாளி. பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் அவர்கள் சிரமப்படுவதை பார்த்த அவர் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வீட்டிலிருந்து மின்ஒயரை தெருவுக்கு எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad