திருக்கோவிலூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 12 January 2023

திருக்கோவிலூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம்


திருக்கோவிலூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருக்கோவிலூர் நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருக்கோவிலூர் அரசு அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

இந்த ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது புகை இல்லா போகிபண்டிகையின் முக்கியத்துவம் குறித்து மாணவிகள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா, நகர மன்ற உறுப்பினர்கள், துப்புரவு ஆய்வாளர் ராஜா, துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் பேரூராட்சி ஊழியர்களும், துப்புரவு பணியாளர்களும், பரப்புரை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad