சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது - 8 கிலோ குட்கா பறிமுதல் - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 28 January 2023

சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது - 8 கிலோ குட்கா பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ குட்காவை பறிமுதல் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த மூன்று உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 28.01.2023-ந் தேதி உளுந்தூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. பிரபாகரன் தலைமையில் காவலர்கள் சகிதம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது பாக்கியராஜ்(38) த/பெ கண்ணன், பு.மலையனூர் மற்றும் வெனிஸ்(45) த/பெ ராஜய்யா உளுந்தூர்பேட்டை ஆகிய இருவரும் அவர்களது கடையில் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்தபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 8 கிலோ அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் ஓராண்டு குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யபட்டுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad