கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க சனி மற்றும் ஞாயிறு சிறப்பு முகாம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 December 2022

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க சனி மற்றும் ஞாயிறு சிறப்பு முகாம்.


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 85 சதவீதம் வாக்காளர்களின் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 சதவீத வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியல் உடன் இணைக்காமல் உள்ளனர்.


வாக்காளர்களின் நலன் கருதி இன்று சனி க்கிழமை 10 மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை 11 ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காத நபர்களது அவரவர் வீட்டிற்கு சென்று ஆதார் விபரங்களை கேட்டு பெற்றுக்கொள்ள சிறப்பு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை இதுவரை இணைக்காத வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அந்தந்த வாக்கு சாவடி நிலை அலுவலகம் இடம் ஆதார் விபரங்களை அளித்து ஆதார் எண்ணை வாக்காளர் என்னுடன் இணைத்துக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.


-உளுந்தூர்பேட்டை செய்தியாளர். க.சமியுல்லா

No comments:

Post a Comment

Post Top Ad