கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அணி நிர்வாகிகள் விரைவில் தேர்வு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 December 2022

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அணி நிர்வாகிகள் விரைவில் தேர்வு.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ. வேலு வழிகாட்டுதலின் பேரில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுகவில் புதிய அணி நிர்வாகிகள்.


இளைஞர் அணி, மாணவர் அணி, விவசாய அணி, மகளிர் அணி,தொண்டர் அணி, பொறியாளர் அணி,விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய அணி, பகுத்தறிவு பேரவை, ஆதிதிராவிட நல அணி, சிறுபான்மையினர் நல அணி, நெசவாளர் அணி, வர்த்தக அணி, மீனவர்கள் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, புதியதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் அணி, அமைப்பு சாரா தொழிலாளர் அணி, அயலக அணி, ஆகியவற்ற அணிகளுக்கு விரைவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளது.
 


அதாவது இளைஞர் அணி, மகளிர் அணி,  மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணிகள் நகராட்சி ஒன்றிய இயக்கம் பேரூர் கழகம் பூத் கமிட்டி அளவிலும், மருத்துவ அணி தவிர பிற அனைத்து அணிகளும் நகராட்சி பேரூராட்சி ஒன்றிய அளவில் செயல்பட வேண்டும்.


மருத்துவ அணி மாவட்ட அளவில் தொகுதி அளவிலும் செயல்படும். வயது வரம்பின் காரணமாக இளைஞர் அணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி மற்றும் மாவட்ட அளவில் அணித்தலைவர் பதவி உருவாக்கப்படவில்லை.


பிற அனைத்து சார்பு அணிகளும் மாவட்டத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளை கௌரவ அடிப்படையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளின் நியமனம் செய்துவிட்டு சிறப்பாக செயல்பட கூடியவர்களை அமைப்பாளர்கள் ஆகவும் துணை அமைப்பாளர்களாகவும் நியமனம் செய்ய வேண்டும் அணி தலைவர்கள் துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு பொதுக்குழுவில் அந்தஸ்து இல்லை.


அனைத்து  அணிகளும் நகராட்சி அளவில் ஒரு அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்கள் கொண்டிருக்க வேண்டும். பேரூராட்சி அளவில் ஒரு அமைப்பாளர் 3 துணை அமைப்பாளர்கள் கொண்டிருக்க வேண்டும்.


பூத் கமிட்டி அளவில் செயல்பாடு அணிகள் ஒரு அமைப்பாளர் 3 துணை அமைப்பாளர்களை கொண்டிருக்க வேண்டும். பேரூராட்சி வட்டங்களில் இரண்டு அமைப்பாளர்கள் இருக்க வேண்டும்.


புதியவர்கள் கழகத்தில் பணியாற்ற துடிப்பானவர்கள் மாவட்டத்தின் தேர்தலின் போது வாய்ப்பு கிடைக்காதவர்கள் என அனைத்து தரப்பினர்களையும் பரிசளிக்கப்பட வேண்டும்.


அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்புகள் முழுமையாக நிரப்பப்பட்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பட்டியல் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டியுள்ளதால் அணி நிர்வாகிகள் பதவிகளுக்கான விருப்பமுள்ள கழகத் தோழர்கள் விருப்பமானவை மாவட்ட செயலாளரிடம் விரைந்து கொடுக்க வேண்டும், என்று கள்ளக்குறிச்சி தெற்கு திமுக மாவட்ட  செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad