கள்ளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 14 December 2022

கள்ளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி.

கள்ளக்குறிச்சி அருகே விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி முனியம்மாள் வயது 53. நேற்று மதியம் தனது வீட்டின் வெளியே பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த பொழுது அருகில் இருந்த மரத்தின் மீது இடி விழுந்தது அப்போது முனியம்மாள் மீது மின்னல் தாக்கியது.


இதில் சம்பவ இடத்திலேயே முனியம்மாள் சுருண்டு கீழே விழுந்தார். உடனே அவரது உறவினர்கள் முனியம்மாளை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் முனியம்மாவை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் சின்னசேலம் அருகே பெத்தானூர் கிராமத்தில் வசித்து வருபவர் செந்தில் மனைவி உமா வயது 35, ராமர் மனைவி பெரியம்மாள் வயது 37 இருவரும் அதே பகுதியில் விவசாய வேலைக்காக சென்றிருந்தனர்.


வயலில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது அப்பொழுது மின்னல் தாக்கி உமா மற்றும் பெரியம்மாள் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்கள். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அம்மகளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.


பின்னர் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இருவரையும் சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக  தெரிவித்தார்கள். தகவல் அறிந்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா, வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad