கள்ளக்குறிச்சியில் நடக்க இருந்த புத்தக திருவிழா மழையின் காரணமாக ஒத்திவைப்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 December 2022

கள்ளக்குறிச்சியில் நடக்க இருந்த புத்தக திருவிழா மழையின் காரணமாக ஒத்திவைப்பு.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயல் மழை காரணமாக நடக்க இருந்த புத்தகத் திருவிழா ஒத்துழைக்கப்பட்டுள்ளது.இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா பத்தாம் தேதி நடக்க இருந்தது பத்து நாட்கள் நடக்க இருந்த இந்த திருவிழா கள்ளக்குறிச்சி அடுத்த சென்னை சேலம் புறவழிச் சாலை அருகில் மிகப்பெரிய அளவிலான கண்காட்சி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 10 தேதி திறக்க தயார் நிலையில் இருந்தன.


இந்த நிலையில் மாண்டஸ் புயல் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி புத்தகக்  திருவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


புயல் மழை முடிந்த பின்னர் புத்தக கண்காட்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்  என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.


- உளுந்தூர்பேட்டை செய்தியாளர். க. சமியுல்லா

No comments:

Post a Comment

Post Top Ad