உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 December 2022

உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆதனூர் கிராமம் இந்த கிராமத்தில் சேர்ந்த சன்னியாசி மகன் கொளஞ்சி வயது 55 என்பவரின் கூரை வீடு நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.


அந்த நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது தீ வேகமாக எறிய தொடங்கியது அதன் அருகாமையில் இருக்கும் வீட்டில் தீ பரவியது ராஜாங்கம் வயது 45, பாலமுருகன் வயது 32 , இவர்களின் கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது இந்த விபத்தில் மூன்று பேரின் வீடுகளும் இருந்து கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் வசித்து வந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


உடனடியாக இந்த தீ விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.


இந்த தீ விபத்தில் மூன்று பேரின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது வீட்டில் இருக்கும் பொருட்கள் உணவு தானியங்கள் துணிகள் உள்ளிட்ட பொருள்களும் சேதம் அடைந்தது சேதம் அடைந்த மொத்த மதிப்பு ரூபாய் 5 லட்சம் மாக மதிப்பு இருக்கும் என்று தெரியப்படுகிறது.


இந்த விபத்து சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் துறை அதிகாரி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.


மூன்று பேரின் வீடுகள் தீயினால் கருகி சாம்பல் ஆனதால் அந்த கிராமத்தின் இருக்கும் ஊர் மக்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மத்தியில் மிகவும் வேதனையிலும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad