திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் அரசுப்பள்ளி மாணவர்கள் கலைப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 December 2022

திருக்கோவிலூர் அடுத்த ஆலூர் அரசுப்பள்ளி மாணவர்கள் கலைப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை.


கலை பண்பாட்டுத் துறை மற்றும் மண்டல கலை பண்பாட்டு மையம்- தஞ்சாவூர் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் கலை போட்டிகள் சங்கராபுரம் மூரார்பாது அரசு மேல்நிலைப் பள்ளியில் 25.12.2022 அன்று மண்டல உதவி இயக்குநர் சீ.நீலமேகன் தலைமையில் நடைபெற்றது. 


கலை, குரலிசை, கிராமிய நடனம், பரதநாட்டியம், ஓவியம் என பல்வேறு வகையான கலைப் போட்டிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் ஒன்றியம் ஆலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் ஏழு பேர் கலந்து கொண்டனர்.  


பரதநாட்டிய நடனப்பிரிவில் அபிநயா, சிவரஞ்சனி, புவனேஷ்வரி மற்றும் தீபிகா ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.


இதனையடுத்து மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad