குழாய்கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் குழாய்கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார் . ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்திட 2021-2022-ம் ஆண்டில் ரூ.12 கோடி செலவில் மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துதர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2021-2022-ம் ஆண்டு பணி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 1997 ஊராட்சி கிராமங்களில் உள்ள பாதுகாப்பான குறு வட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்ட சாதிச்சான்று பெறப்பட வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட்(அதிகபட்சம் 10 குதிரைத்திறன் வரை) அமைத்திட வேண்டும்.
No comments:
Post a Comment