அங்கன்வாடி மையத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை சின்னசேலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார்.ஆய்வில் குழந்தைகள் வருகைப் பதிவேடு, பராமரிப்புப் பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டதுடன் குழந்தைகளுக்கு வழங்கும் முட்டை மற்றும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
மேலும் பொருள் வைப்பு அறையில் அரிசி, பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இருப்பு விவரத்தைக் கேட்டறிந்துச் சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுமாறு அங்கன்வாடி மையப் பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.ஆய்வின்போது ஊராட்சி ஒன்றியத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) குமரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்- க சமியுல்லா.
No comments:
Post a Comment