மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்துக்குசென்று 15 மனுக்களை பெற்ற கலெக்டர் தொடர்ந்து பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 468 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த கூட்டத்தில் கல்வி பயிலும், பணிக்கு செல்லும், சுயதொழில் செய்யும் 18 வயதுக்கு மேற்பட்ட காது கேளாத, வாய் பேசாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு தல ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள நவீன வசதிகளுடன் கூடிய செல்போன்கள், 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - க. சமியுல்லா
No comments:
Post a Comment