கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டலம் சமுதாயக் கூடத்தில் 29 12 2022 அன்று நண்பகல் 02.00 மணியளவில் கல்லை மாவட்ட முத்தமிழ்க் சங்கம் மற்றும் கார்குழலி கல்வி அறக்கட்டளை இணைந்து ஆவின் ஒன்றியப் பெருந்தலைவர் நா ஆறுமுகம் தலைமையில் ஐம்பெரும் விழா சௌ அரிகிருஷ்ணனின் இன்னிசை மற்றும் மாணவிகளின் பரதநாட்டியத்துடன் துவங்கிச் சிறப்பாக நடைபெற உள்ளது.
பாரதியார் பிறந்த நாள் விழா, விவசாயிகள் தின விழா பத்திரிகையாளர்களுக்குப் பாராட்டு விழா, சமூக சேவகர்களுக்குக்கு விருது வழங்கும் விழா மற்றும் புத்தாண்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்வில் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் முருக குமார் வரவேற்கிறார்.விருதாளர்களுக்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான தா உதயசூரியன் விருதுகளை வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார்.சங்கராபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் திலகவதி நாகராஜன், சங்கராபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ரோஜாரமணி துரை தாகப்பிள்ளை,சங்கக் காப்பாளர் கோமுகி மணியன், சங்கத்தின் செயலாளர் பழனிவேல்,சங்கப் பொருளாளர் இல அம்பேத்கர்,கார்குழலி கல்வி அறக்கட்டளைத் தலைவர் இராசு தாமோதரன் மற்றும் அரிமா சங்க மாவட்டத் தலைவர் இராம அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை உதவி ஆணையர் பாவலர் சண்முகசுந்தரம் தலைமையில் "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் விவசாயிகள் தின உரை நிகழ்த்துகின்றார்.சிறந்த இயற்கை விவசாயிகள் உள்ளிட்டப் பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கியும் பத்திரிகையாளர்களைப் பாராட்டியும் கௌரவிக்கின்றனர்.
தமிழ்ச் சங்கத்தினர் உள்ளிட்ட சேவை அமைப்பினர் கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.நிழ்ச்சியைச் சங்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாரியாப்பிள்ளை,இணைச் செயலாளர் கலைமகள் காயத்ரி ஆகியோர் தொகுப்புரை வழங்குகின்றனர். விழாவின் நிறைவாக சங்கராபுரம் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஷா இனாயத்துல்லா நன்றி உரையாற்றுகிறார்.அனுமதி இலவசம்,அனைவரும் வருகைதந்து தமிழமுது பருகி விழாவைச் சிறப்பிக்குமாறு விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment