சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 December 2022

சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகிறது.


மூன்றாவது மாடி பூட்டி சீல் வைக்கப்பட்டது கள்ளக்குறிச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் ஆய்வு.

கன்னியாகுமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு நேரடி வகுப்புகள் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது இதனை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கன்னியாகுமரி பள்ளியில் பிளஸ் டூ படித்த வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை ஒட்டி தொடர் போராட்டங்கள் வன்முறைகள் இப்பள்ளி வளாகத்தில் தீ வைப்பு பள்ளி சேதம் அடைத்தல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பேருந்துகள் எரிப்பு போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றது இந்த மாணவி குறித்து சிபி சிஐடி போலீஸ் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார்ம் தனித்தனியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர்.


இந்த நிலையில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நலம் கருதி ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அங்குள்ள தனியார் பள்ளி கல்லூரிகளிலும் இதர வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும் நடைபெற்று வந்தன.


சக்தியும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மறு சீரமைக்கும் அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை ஹைகோர்ட் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கின் அடிப்படையில் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மறு சீரமைப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டது அலுவலர் மற்றும்  காவல் துறையினர் கண்காணிப்பில் மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது.


மறுசீரமைப்பு நடந்து முடிந்த நிலையில் திங்கட்கிழமை இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து பள்ளி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார், அப்போது அந்தப் பள்ளியில் மூணாவது மாடி தளத்தை ஊட்டி சீல் வைத்தார் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு ஆணையிட்டார் அதன் பெயரில் கலெக்டர் முன்னிலையில் பள்ளியில் மூன்றாவது மாடி சீல் வைக்கப்பட்டது.


இதனை ஆய்வின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜா கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி பொதுப்பணித்துறை  செயற் பொறியாளர் மணிவண்ணன் மற்றும் தாசில்தார் அலுவலக உதவியாளர்கள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad