கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பெயரில் 01.12.2022-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டாச்சி மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே உதவி ஆய்வாளர் திரு.சேகர் மற்றும் காவலர் திரு. சிவமுருகன் ஆகியோர் கூத்தக்குடி to கள்ளக்குறிச்சி மார்க்கமாக வந்த TN 23 CL 9573 என்ற பதிவெண் கொண்ட டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் 1.ஆனந்தன்- 50 த/பெ சுப்பிரமணி, வேப்பம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் 2.நாகராஜ்- 60 த/பெ சண்முகம், சஞ்சீவிராயர்புரம், காட்பாடி, வேலூர் மாவட்டங்களை சேர்த்த இருவரையும் விசாரணை செய்தபோது 1 டன் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்திச் சென்றது தெரிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
கடத்தி வந்த 1 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையில் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment