இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார் கூட்டத்தினை பிஜேபி மாவட்ட பொதுச் செயலாளர் கோ.ஆர்.முருகன் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். பிஜேபி ஒன்றிய தலைவர் சிங்காரவேலு அனைவரையும் வரவேற்றார், நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினராக பிஜேபி மாநில பொதுச் செயலாளர் மீனாட்சி வித்யா சுந்தர் கலந்து கலந்து கொண்டு உரையாற்றினார்.
வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலிலும் திறன் பட செயலாற்ற வேண்டும், பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், அதிகப்படியான உறுப்பினர்களை பிஜேபி கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
இக்கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை நகர தலைவர் காந்தி, உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் இளையராஜா, திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணன், கூவாகம் கோவிந்தன், உள்ளிட்ட சக்தி கேந்திரா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மேற்கு ஒன்றிய தலைவர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment