திருநாவலூர் ஒன்றியத்தில் கிளாப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 5 December 2022

திருநாவலூர் ஒன்றியத்தில் கிளாப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் 2020-21 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிக்கான பட்டியல் வெளியானது 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநாவலூர் ஒன்றியத்தில் கிளாப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது பெறப்பட்டது. அந்த விருதை மாண்புமிகு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் கிளாப்பாளையம் பள்ளி ( பொறுப்பு )தலைமை ஆசிரியர் திரு அ.சூரியகுமார்  அவர்களிடம் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வை பாராட்டும் விதமாக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் A.J.  மணிக்கண்ணன் வாழ்த்துக்களுடன் திருநாவலூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ATMA குழு தலைவர் திருநாவலூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் K.V. முருகன் இந்தப் பள்ளியின் ( பொறுப்பு ) தலைமை ஆசிரியர் திரு அ.சூரியகுமார் இந்த விருதை பெற காரணமாக இருந்த இந்தப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தா. சுப்பிரமணியன் அவர்களுக்கு  இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.


இவர்களுடன்  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.எ. குமாரசாமி ஆதனூர் முன்னாள் கவுன்சிலர் வேலு, திருநாவலூர் முன்னாள் கவுன்சிலர் முருகானந்தம், அயன் வேலூர் கவுன்சிலர் மணிகண்டன், காம்பட்டு முன்னாள் தலைவர் சக்திவேல், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை தந்து பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில்   கலந்து கொண்டு சிறப்பித்து பாராட்டுகளை ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad