தமிழக திரைப்படத்துறையில் முன்னணி நடிகருமான நடிகர் விஜய்யின் அவர்களின் 30 ஆண்டுகால திரை உலக பயணம் தொடங்குவதை முன்னிட்டு சாலையோர உள்ள ஆதரவற்ற ஏழைகளுக்கு போர்வை மற்றும் தேவையான உணவுப் பொருள்களை விஜயின் மக்கள் இயக்கம் மன்ற நிர்வாகிகளுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் விஜயின் மக்கள் இயக்க நிர்வாகிகள் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் திரு பரணி பாலாஜி அவர்கள் ஆலோசனைப்படி, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன் தலைமையில், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இளைஞரணி தலைவர் விஜய் செல்வா முன்னிலை வகித்தார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் விஜய் சந்துரு, நகர இளைஞரணி பொருளாளர் பாரதிராஜா, ஒன்றிய இளைஞரணி கௌரவத் தலைவர் ஐயப்பன் கொணலவாடி கிளை தலைவர் கௌதம், குமாரமங்கலம் கிளை நிர்வாகி தமிழழகன் நகர வார்டு நிர்வாகி ஜெயராஜ், ஆகாஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலையோரம் உள்ள ஆதரவற்ற 25 க்கும் மேற்பட்ட ஏழை முதியோர்களுக்கு போர்வை மற்றும் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment