கள்ளக்குறிச்சியில் டிசம்பர் 6 வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம் பெருந்திரள்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 December 2022

கள்ளக்குறிச்சியில் டிசம்பர் 6 வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம் பெருந்திரள்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் தமுமுக சார்பாக சங்கராபுரத்தில் வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சிகரமாக நடைபெற்றது.


டிசம்பர்-6  வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சார்பாக  சங்கராபுரத்தில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.பசல் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார். 
தமுமுக மாவட்ட செயலாளர் எஸ்.முகம்மது ஆரிப் வரவேற்புரை மற்றும் மௌலவி  அல்தாப் அஹமத் தாவூதி கிராத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமுமுக மாநில  செயலாளர் ஐ.முபாரக் அவர்கள் மற்றும் தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரபீக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.


இதில் மமக மாவட்ட செயலாளர் ஏ.ஜெ.முஹம்மது அலி மாவட்ட பொருளாளர் எஸ்.பி.ஜஹாங்கீர், திராவிட முன்னேற்றக் கழக சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் நகரச் செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவருமான துரை, தாகப்பிள்ளை இந்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ் மாநில துணைத்தலைவர்  சிறுபான்மை பிரிவு வாசிம் ராஜா பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆயிஷா பிவி, மதிமுக ஒன்றிய செயலாளர்கள் புகழேந்தி மற்றும் லட்சுமிகாந்த், விசிக ஒன்றிய செயலாளர்கள் மண் சிந்தனை வளவன் மற்றும் தலித் சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சசிகுமார் IUML லியாகத் அலி ஜமாத் பெரியவர்கள் சாகுல் பாய் மற்றும் நிர்வாகிகள்  தமுமுக மாவட்ட துணை தலைவர்  சையத் கரீம் துணைச் செயலாளர்கள் முகமது ஈசா, முபாரக், முஹம்மத் பாரூக், இப்பு என்கிற இப்ராஹிம், மாலிக், அஸ்கர் மாவட்டம் ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர்  பங்கேற்று வழிபாட்டுரிமைப் பாதுகாப்புக்கு வலிமை சேர்த்தனர். இறுதியாக சங்கராபுரம் தெற்கு ஒன்றிய தலைவர் இஸ்மாயில் கான் அவர்களுடைய நன்றியுரை உடன் கூட்டம் இனிதே முடிவு பெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad