திருக்கோவிலூர் அருகே ஜா சித்தாமூர் மும்முனைச் சந்திப்பில் வழிகாட்டி பெயர்ப்பலகை வைத்த எம்எல்ஏ . - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 30 December 2022

திருக்கோவிலூர் அருகே ஜா சித்தாமூர் மும்முனைச் சந்திப்பில் வழிகாட்டி பெயர்ப்பலகை வைத்த எம்எல்ஏ .

திருக்கோவிலூர் அருகே ஜா சித்தாமூர் மும்முனைச் சந்திப்பில் வழிகாட்டி பெயர்ப்பலகை வைத்த எம்எல்ஏ .


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் ஆதி திருவரங்கம் உள்ளது.இக்கிராமத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த  அ/மி அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.



இந்நிலையில் ஆதி திருவரங்கம் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜா சித்தாமூர் மும்முனைச் சந்திப்பில் எந்தப் பக்கம் செல்லவேண்டும் என்றச் சந்தேகத்துடன் செல்வதும்,வெகுசிலர் வழிமாறிச் சிறிது தூரம் சென்றும் வந்தனர்.இதனால் பொதுமக்கள் இரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் க கார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்தனர்,அதனைப் பரிசீலித்து இந்து சமய  மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பாலாஜி பூபதியிடம் வழிகாட்டிப் பெயர்ப்பலகை வைக்க ஆலோசனை வழங்கினார்.


அதனடிப்படையில் உடனடியாக பெயர்ப்பலகை வைத்தார்.இதனால் இப்பகுதியில் உள்ளப் பொதுமக்கள் மற்றும் திருக்கோவிலுக்குவரும் பக்தர்கள் எம்எல்ஏவை வெகுவாகப் பாராட்டியதுடன் நன்றி தெரிவித்துவருகின்றனர்.


செய்தியாளர்: க பார்த்திபன்

No comments:

Post a Comment

Post Top Ad