சங்கராபுரம் அடுத்த பாண்டலத்தில் ஐம்பெரும் விழா - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 30 December 2022

சங்கராபுரம் அடுத்த பாண்டலத்தில் ஐம்பெரும் விழா

சங்கராபுரம் அடுத்த  பாண்டலத்தில் ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டலம் சமுதாயக் கூடத்தில் கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக பாரதியார் பிறந்தநாள் விழா, விவசாயிகள் தின விழா, பத்திரிக்கையாளர்களுக்குப் பாராட்டு விழா,சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் புத்தாண்டு விழா  உள்ளிட்ட ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது,

 

நிகழ்வின் தொடக்கமாக அரிகிருஷ்ணனின் இன்னிசை நிகழ்ச்சியும், விழுப்புரம் இசைப்பள்ளி மாணவி பைரோஸ் பரதநாட்டியத்துடன்  துவங்கியது. நிகழ்விற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சங்கத்தின் காப்பாளருமான கோமுகி மணியன்  தலைமை தாங்கியதுடன் விவசாயத்தின் மகத்துவம் மற்றும் அவர்களின் இன்றைய நிலையைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். மாவட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் அனைவரையும் வரவேற்றார். 

          


 நிகழ்விற்கு சங்கராபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ரோஜாரமணி துரை தாகப்பிள்ளை, வேளாண்மைத் துறை இயக்குனர் புஷ்பராணி, முத்தமிழ்ச்சங்கப் பொருளாளர் இல அம்பேத்கர்,கார்குழலி கல்வி அறக்கட்டளைத் தலைவர் இராசு தாமோதரன் மற்றும் அரிமா சங்க மாவட்டத் தலைவர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


             

மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை உதவி ஆணையர் பாவலர் சண்முகசுந்தரம் தலைமையில் "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற தலைப்பில் கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது.கவியரங்கில் குழந்தைக் கவிஞர் கதிர்வேல்,கவிஞர் சந்திரசேகர், கவிஞர் சாந்தகுமார், கவிஞர் கோவிந்தன், கவிஞர் பாரதி கிருஷ்ணன் மற்றும் கவிஞர் ஜாபர் அலி ஆகியோர் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.அதனைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன்  விவசாயிகள் தின உரை நிகழ்த்தினார்.


பல்வேறு துறைகளில் சேவை புரிந்த கடலூர் பா.மொ.பாஸ்கரன், சென்னை மக்கள் கூத்து ஆசிரியர் பகத்சிங்,பாண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர். பாப்பாத்தி நடராஜன்,எஸ்எம்டி தொண்டுநிறுவனத் தலைவர் கற்பகம் தனவேல், மருத்துவர் சிந்து வள்ளி சிதம்பரம், மூத்த பத்திரிக்கையாளர் சூரியநாரயணன் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் இருபது ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முத்தமிழ் விருதுச் சான்றுகளை பாவலர் சண்முகசுந்தரம் வழங்கிச் சிறப்புரையாற்றினார்,  


தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சத்யராஜ்,  சங்கராபுரம் அனைத்து வியபாரிகள் சங்கத் தலைவர் சேகர், தமிழ்ப் படைப்பாளர் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை,கல்லைத் தமிழ்ச்சங்கச் செயலாளர் மதிவாணன், குறிஞ்சி தமிழ்ச் சங்கத் தலைவர் கோமுகி தாசன், சங்கைத் தமிழ்ச் சங்க செயலாளர் சாதிக்பாட்சா, முனைவர் கமலநாதன், அரிமா சங்கத் தலைவர். அறிவுடைநம்பி, மருத்துவர் நெடுஞ்செழியன், திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் செளந்தரராசன் மற்றும் சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.நிழ்ச்சியை முத்தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாரியாப்பிள்ளை, தொகுத்து வழங்கினார்.


விழாவில் பெருமளவில் பெண்களும் தமிழார்வலர்களும் கலந்துகொண்டனர்.விழாவின் நிறைவாக முத்தமிழ்ச் சங்க நிர்வாகி தனவேல் நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad