மஞ்சப்பை விருது விண்ணப்பிக்க பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் அழைப்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 21 December 2022

மஞ்சப்பை விருது விண்ணப்பிக்க பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் அழைப்பு.

தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2022-23-ஆம் நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன கவர்கள் ஆகியசுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக தேர்வு செய்து இவ்விருதானது வழங்கப்படும்.

                   

மாநில அளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்தடையை திறம்படசெயல்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்தகல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். மேலும் முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.

                

இவ்வறிப்பினைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை
ஊக்குவிக்கும் பொருட்டு மஞ்சப்பை விருதினை வழங்க உள்ளது.

               

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இவ்விருத்திற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபர்/துறை தலைவர் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்கள் (CD,Pendrive) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், (தாலுக்கா அலுவலகம் பின்புறம்) விழுப்புரம் 605 602 என்ற முகவரியில் 01.05.2023க்குள் சமர்ப்பிக்க  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad