உளுந்தூர்பேட்டை அருகே எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடு - கண்டுகொள்ளாத அதிகாரிகள். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 December 2022

உளுந்தூர்பேட்டை அருகே எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடு - கண்டுகொள்ளாத அதிகாரிகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர், அரளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் 30 மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கிய தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமான நிலையிலும், எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பயனாளிகள் அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரையில் கண்டு கொள்ளாத ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் அதிகாரிகளும் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் இந்நாள் வரை எடுக்கவில்லை எனவே கிராம மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் புதிய வீடுகள் ஒதுக்கித் தருமாறு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாவட்ட பொது செயலாளர் க.கண்ணன் உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் ஜெ.பொன்னுரங்கம் தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச் செல்வம் தொகுதி பொருளாளர் ம.அறிவுச்செல்வம், திருநாவலூர் ஒன்றிய தலைவர் ரா.ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பாண்டூர், அரளி கிராம பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அரசுக்கு கோரிக்கை வைத்து அனைவருக்கும் வீடு கட்டுவதற்கான நிலையை உருவாக்கி தருவோம் என உறுதி அளித்தனர்.

 

செய்தியாளர் க.சமியுல்லா.

No comments:

Post a Comment

Post Top Ad