கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரம் கிழக்கு 17வது வார்டு திருவள்ளுவர் தெருவில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவு நீர் வாய்க்காலில் தேங்கி நின்ற மண்மேடுகள் அகற்ற பணி இன்று நடைபெற்றது.
அந்த தெரு முழுவதும் உள்ள வாய்க்கால் இன்று தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த பணிகளுக்கு உத்தரவிட்டு நகர மன்ற தலைவர் நாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் சரவணன், மேற்பார்வையாளர்கள் தமிழ்மணி, சத்யராஜ் ஆகியோரம் செல்வகுமாரி ரமேஷ் பாபு 17வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.
- கள்ளக்குறிச்சி செய்தியாளர் பார்த்திபன்

No comments:
Post a Comment