கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநாவலூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் K.V. முருகன் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 2 வது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக திரு உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களை தேர்வு செய்தமைக்கு திமுகவின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மற்றும் கூட்டத்தில் வருகின்ற 27 ஞாயிற்றுக்கிழமை திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாளை திருநாவலூர் மேற்கு ஒன்றியத்தில் உட்பட்ட 20 ஊராட்சிகளில் சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கழக முன்னோடிகள்,கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment