கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே களமருதூர் தனியார் பள்ளி வளாகத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை, சம்பா நெல் சாகுபடி மற்றும் இயற்கை வேளாண்மை குறித்தப் பயிற்சிக் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்ப்பேட்டை எம்எல்ஏவும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான ஏ ஜெ மணிக்கண்ணன், உளுந்தூர்ப்பேட்டை நகரமன்றத் தலைவர் திருநாவுக்கரசு, உளுந்தூர்ப்பேட்டை நகரமன்றத் துணைத் தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர், தொல்காப்பியன், வேளாண்மைத் துறை அலுவலர் மோகன்ராஜ், திருநாவலூர் ஒன்றியச் சேர்மன் சாந்தி இளங்கோவன், அட்மா குழுத் தலைவர் அன்புமணி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பத்மனாபன், ஒன்றியக் கவுன்சிலர் காமராஜ், நகர மன்ற உறுப்பினர் செல்வக்குமாரி இரமேஷ்பாபு, இயற்கை வேளாண்மை விவசாயி இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment