கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை காவல் நிலையம் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன அப்போது ஒரு மாணவி நாங்க எல்லாம் உதவி ஆய்வாளராக ஆக முடியுமா? சார் என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதனையடுத்து அந்த மாணவியை திருக்கோவிலூர் ஆய்வாளர் பாபு அவர்கள் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து மாணவியின் ஆசியை உடனடியாக நிறைவேற்றினார், இதனை நேரில் பார்த்த சக மாணவிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் மாணவியின் ஆசையை நிறைவேற்றிய திருக்கோவிலூர் காவல் ஆய்வாளருக்கு சக மாணவிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment