
அந்த நிலையில் 7/11/22 நேற்று மாலை பாதிக்கப்பட்ட மக்களின் நேரில் சந்தித்தபோது இயற்கை அவர்களை எவ்வாறு பழி வாங்குகிறது என்பதை நேரில் சென்று உணர்ந்தனர் பிறகு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இலவச மனை பட்டா மற்றும் சாதி சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அது மட்டுமின்றி வருகின்ற 10.11.2022 காலை 10 மணி அளவில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட மக்களுடன் இலவச மனை பட்டா மற்றும் சாதி சான்றிதழ் வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களை பகுஜன் சமாஜ் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் N.ஜீவன்ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் மூர்த்தி, ஆரோக்கியசெல்வம், பொன்னுரங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment