கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செவிலியங்குளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் நியாய விலை கடை இல்லாததால் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூவாகம் கிராமத்திற்கு நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர் இதனால் இந்த கிராமத்தில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நேரில் முறையிட்டும் இதனால் வரை நடவடிக்கை எடுக்காததால் இன்று ஊராட்சி மன்ற தலைவர் கே.முருகன், ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வி.ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஏ.அனுராஜ், ஆர்.ரமேஷ், அதிமுக கிளைக் கழகச் செயலாளர் அருள், வேலு, கிருஷ்ணமூர்த்தி, முரளி, முருகன், அண்ணாமலை மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வந்தனர்.

இதனை அறிந்த உளுந்தூர்பேட்டையில் பணி செய்து வரும் தலைமை காவலர் ஜானகி என்பவர் அவர்களை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டம் செய்யக்கூடாது எனவும் அதற்கு பதிலாக மனுவாக கொடுங்கள் என அறிவுரை கூறினர் பெண் காவலரின் அறிவுரை ஏற்று அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு வெளியே வந்த அவர்களிடம் அந்தப் பெண் காவலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பதை குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment