புரட்சி பாரதம் கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 10 November 2022

புரட்சி பாரதம் கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பூவை.க.ஆறு  உளுந்தூர்பேட்டை தொகுதி செயலாளர் கே.கே.ஏழுமலை ஆகியோரின் தலைமையில் நேற்று (10.11.2022) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வண்குமார். IAS அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர்.

இதில் புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி ஒன்றிய நகர நிர்வாகிகள் மாடூர் ரவி அ.ராஜா க.மணிகண்டன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். குன்னத்தூரில் இயங்கிவரும் அரசு சத்துணவு கூடம், மற்றும். பள்ளியின் காங்கிரட் மேல் கூரை இடிந்து விழும் அவல நிலையை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கடந்த மாதம் புரட்சி பாரதம் கட்சியினர் மனு அளித்தும் ஊடகத்தின் மூலம் கோரிக்கை வைத்தனர். 


உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் பழுதான கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்தும் குன்னத்தூரில் இயங்கி வரும் பள்ளிக்கூடத்தின் கான்கிரீட் மேல்கூரையை சீரமைத்து துரிதமான முறையில் நடைமுறைப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அவர்களை  நேரில் சென்று சந்தித்து தனது நன்றிகளையும் மகிழ்ச்சியும் புரட்சி பாரதம் கட்சியினர் தெரிவித்தனர் 


பின்னர்  உளுந்தூர்பேட்டையை அடுத்த நத்தாமூர் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நத்தாமூர் பேருந்து நிலையத்திலிருந்து நத்தாமூர் காலனி செல்லும் வரை போடப்பட்ட தார் சாலை மிக மோசமாகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் விவசாய பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாமல் நடந்து செல்லும் அவல நிலை, சாலை ஓரம் மின் வசதி இல்லாமலும் தெருக்கள் முழுவதும் மின்சார வசதி இல்லாமல் இருண்டு கிடக்கும் அவல நிலையை பலமுறை நத்தாமூர் பொதுமக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து கோரிக்கை வைத்தனர் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனை அறிந்த  புரட்சி பாரதம் கட்சியினர் நேரில் சென்று  நத்தாமூர் கிராமத்தை ஆய்வு செய்து  இன்று  மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து உடனடியாக நத்தாமூர் காலனி பொது மக்களுக்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் நத்தாமூர் சாலை ஓரம் முழுவதும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தந்திட வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர், கோரிக்கை மனுவை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தார் சாலைகள் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார். 


பிறகு சமீபகாலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறிப்பாக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு கட்டிடங்கள் தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள், சுடுகாட்டு கொட்டகை, கழிவுநீர் கால்வாய், சுற்றுச்சுவர், போன்ற அரசு ஒப்பந்தத்தின் மூலம் கட்டப்படும் கட்டிடங்கள் தரம் இல்லாமல் கட்டப்படுகின்றன சிமெண்ட் அதிகமாக கலக்காமல் எம் சேண்ட் அதிகமாக பயன்படுத்தி கட்டுவதால் தரம் இல்லாமல் கட்டப்பட்டு வரும் கால்வாய்கள் ஒரு வாரத்திற்குள்ளேயே  இடிந்து விழும் அவல நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த முறைகேடுகளில்  ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். 


அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கொள்ளை கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும்  மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர் மனுவைப் பெற்ற ஆட்சியர் உடனடியாக ஒப்பந்ததாரர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad