கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் ஆலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் ஆ.செல்வக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் பா.அழகம்மாள் முன்னிலை வகித்தார்.பள்ளியில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் சமூக நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மாணவர்களுக்கு கலை, இலக்கியம், பாட்டு, பரத நாட்டிய நடனம் மற்றும் ஓவியம் போன்ற தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசுப் பொருட்களும், சிவகாசி அன்னை பேக் சென்டரின் அன்பளிப்பாக 50 புத்தகப் பைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி .மலர் முருகன் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் த.சசிக்குமார், சூ.இராபர்ட் சகாயராஜ், சு.கோவிந்தராஜ் செய்திருந்தனர். நிறைவாக ஆசிரியை கோ.சுதா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment