கண்டுகொள்ளாத மின்வாரியம்; பொதுமக்கள் செல்லக்கூடிய பாதையில் மின்சாரம் செல்லும் மின் கம்பி ஒயர் அறுந்து கிடக்கிறது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 15 November 2022

கண்டுகொள்ளாத மின்வாரியம்; பொதுமக்கள் செல்லக்கூடிய பாதையில் மின்சாரம் செல்லும் மின் கம்பி ஒயர் அறுந்து கிடக்கிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் ஊராட்சிக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள சுடுகாடு செல்லும் வழி பாதையின் அருகாமையில் மின்சாரம் சென்று கொண்டிருக்கும் மின் கம்பத்தின் ஒயர் அறுந்து கீழே தொங்குவதாக அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக வடக்கு கிழக்கு பருவ மழை பெய்து அனைத்து பகுதிகளிலும் நீர் நிலைகள் தண்ணீர் தேங்கி  உள்ளது. சிறுவர்கள் பெரியவர்கள்  கால்நடைகள் விவசாய வேலைகளுக்கு செல்லும் விவசாயிகள் பெரும் அச்சத்துடன் நடந்து செல்லலாம் தெரிவிக்கின்றனர். 

அதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு மின் வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தந்தை பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை. 

No comments:

Post a Comment

Post Top Ad