அந்த நேரத்தில் கல்வராயன் மலை ஒட்டியுள்ள கோமுகி அணையின் உபரி நீர் 3000 கன அடி திறந்து விடப்பட்டது. இவர்கள் ஆற்றிலிருந்து வெளியேறத் தொடங்கிய நேரத்தில் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து இருக்கிறது. இதில் அவரது நண்பர்கள் கரையேறி விட சரண்ராஜ் மட்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து கரையேறிய இளைஞர்கள் கச்சராபாளையம் காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடித்துச்செல்லப்பட்ட இளைஞர் சரண்ராஜை தேடினர். இதனிடையே உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு படையினருக்குத் தகவல் அளிக்க, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் இறங்கினர்.
இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு மூன்றாவது நாளான இன்று வன்னஞ்சூர் கிராமத்தின் அருகே இளைஞர் சரண்ராஜ் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை காவல்துறை உடனடியாக பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளத்தில் இளைஞர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment