தமிழ்நாடு அரசால் 15 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, கலை நன்மணி, கலை சுடர்மணி, கலை இளமணி மூன்று பிரிவின் கீழ் தமிழக அரசால் சான்றிதழ்கள் ரொக்கத் தொகையையும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு கால்நடை மருத்துவம் பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் A.J. மணிக்கண்ணன் MLA. 15 நபர்களுக்கு விருதுகள் வழங்கினார்கள்.

இதில் உளுந்தூர்பேட்டை நலம் காக்கும் நாட்டு மருந்து என்னும் நூலின் ஆசிரியர், அருணா கல்வி நிறுவனம் தாளாளர், தமிழ் சங்கத்தின் தலைவருமான முனைவர் அருணா.தொல்காப்பியன் அவர்களுக்கு தமிழக அரசால் கலை நன்மணி விருது பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் திருநாவலூர் ஒன்றிய பெரும் தலைவர் சாந்தி இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், மேட்டாத்தூர் பழனி, களமருதூர் ஆனந்த ரங்கநாதன், மதிமுக ஒன்றிய செயலாளர் ஏழுமலை, சமனங்கூர் குணசேகரன், கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment