உளுந்தூர்பேட்டையில் விபத்து ஒருவர் பலி. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 25 November 2022

உளுந்தூர்பேட்டையில் விபத்து ஒருவர் பலி.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆசனூர் கல் குவாரிக்கு திருநரங்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, பழனிவேல், ராஜா, 3 பேர் வேலை கேட்டு ஆசனூர் கல் குவாரிக்கு சென்றனர்.

சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது உளுந்தூர்பேட்டை திருச்சி புறவழிச்சாலையில் பாலி பில்லூர் என்ற இடத்தில் டாரஸ் லாரி இவர்கள் இரு சக்கரம் வாகனத்தின் மீது மோதியது இதில் ஏழுமலை என்பவர் சம்பவ இடத்திலேயே டயர் நசுங்கி இறந்து விட்டார்.


பழனிவேல், ராஜா, இருவரும் பலத்த காயங்களுடன் உயிர்த்தப்பினர் இவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து  திருநரங்குன்றம் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad