கள்ளக்குறிச்சியில் பிரபலமான ஒரு தனியார் பள்ளி இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர், கள்ளக்குறிச்சி சேலம் புறவழிச் சாலையில் ஏமப்பேர் ரவுண்டானா அருகில் திடீரென பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இப்பள்ளி பேருந்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர் அதில் 14 மாணவர்கள் காயம் அடைந்தனர். உயிர் சேதம் எதுவும் இல்லை, காயமடைந்த மாணவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உடனடியாக பள்ளிப் பேருந்தை ராட்சத இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், மாவட்ட எஸ் பி பகலவன், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து எப்படி நடந்தது என்று அருகாமையில் இருக்கும் நபர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
No comments:
Post a Comment