கள்ளக்குறிச்சி மாவட்டம் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு பி பகவான். இ கா பா அவர்கள் தலைமையில் காவலர்களுக்கான பொதுப் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது, அப்போது 3 வருடம் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ள 96 காவல் துறையினர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆயுதப் படையில் இருந்த தாலுக்கா காவல் நிலையத்திற்கு செல்லும் 28 காவலர்கள் என மொத்தம் 124 காவல்துறையிடம் பணியிடுமாறுதல் தொடர்பான விருப்ப மனு பெற்று பணியிட மாறுதல் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
அப்பொழுது சட்டம் ஒழுங்கு பணி புதிதாக செல்லும் ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பணி புரிய வாழ்த்துக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 124 காவல்துறையினர் நேரில் அழைத்து அவர்களை மாவட்ட காவல் நிலைய காலி பணியிடங்களுக் அவர்களின் விருப்பத்தின்படி பணி மாறுதல் வழங்கிய தில் காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சிய ஏற்படுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு விஜயா கார்த்திக் ராஜா கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு ரமேஷ் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு சண்முகம் மற்றும் காவல் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பார்த்திபன்.
No comments:
Post a Comment