கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் ஆலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நமது பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் நிகழ்வாக உணவுத் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் ஆ.செல்வக்குமார் வரவேற்றார்.

விழாவிற்கு ஆலூர் ஊராட்சிமன்றத் தலைவர் மலர்முருகன் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் வட்டாரக் கல்வி அலுவலர் உயர்திரு. இராஜந்திரன் மற்றும் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உயர்திரு.நாராயண சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மதிப்புமிகு. கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைப் பெருந்தலைவர் மு.தங்கம் அவர்கள் கலந்து கொண்டு விழா குறித்து வாழ்த்துரை வழங்கியும், மாணவர்களுக்கு நவீன குடிநீர் சுத்திகரிப்பான் திறந்து வைத்தும், பள்ளிக்கு சிறு மின்விசை பம்ப் குடிநீர் வசதி அமைத்துக் கொடுத்தும் சிறப்பு செய்தார்கள்.
உடன் ஊராட்சி செயலர் சு.ஏழுமலை அவர்களும்,ஊர் முக்கியப் பிரமுகர் திரு.மாரிச்சாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் மாணவர்களின் பாரம்பரிய உணவுகளின் படைப்புகள் அனைவரையும் கவர்ந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பெருந்திரளாக பெற்றோர்கள் மற்றும் ஊர்ப் பொது மக்கள் உணவுத் திருவிழாவினைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை கோ.சுதா,சூ.இராபர்ட் சகாயராஜ் மற்றும் சு.கோவிந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியாக ஆசிரியர் த.சசிக்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment