உளுந்தூர்பேட்டை அருகே பாலகொள்ளையில் விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள நரியனோடை தரைப்பாலம், வெள்ளத்தில் மூழ்கியது, இதற்கிடையே, விருத்தாசலம் அருகே உளுந்தூர்பேட்டை சாலையில் செம்பளக்குறிச்சியில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கி போனது, இதனால், விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை இடையிலான நேரடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து மாற்றுப்பாதையாக பூவனூர், பாலக்கொள்ளை மற்றும் நரியனோடை வழியாக உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் போக்குவரத்து நேற்று மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சென்னை செல்லும் பஸ், கார்கள் அனைத்து வாகனங்களும் இதன் வழியாகவே சென்று வந்தன.
No comments:
Post a Comment