திருநாவலூரில் திமுக செயல் வீரர் கூட்டம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 October 2022

திருநாவலூரில் திமுக செயல் வீரர் கூட்டம்.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன்., எம்எல்ஏ அவர்களின் மகன் திருமணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை, இதை முன்னிட்டு திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்  செயல் வீரர் கூட்டம் திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கேவி முருகன் தலைமையில் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் திமுக செயலாளர் தா.உதயசூரியன் எம்எல்ஏ  மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ‌.மணிக்கண்ணன், சிறப்புரையாற்றினார்கள், திருமண அழைப்பிதழை மாவட்ட ஒன்றிய சார்பு அணி கிளை கழக நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில் உளுந்தூர்பேட்டை  மாவட்ட பொருளாளர் ஜெயராமன் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜவேல் உளுந்தூர்பேட்டை நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு  முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீசன் மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி ஒன்றிய குழு பெருந் துணை தலைவர் ராமலிங்கம் ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் மருதுபாண்டி  முருகன் மு.ஒன்றிய கவுன்சிலர்கள் குமாரசாமி முருகானந்தம் முடிவில் களமருதூர் கிளை செயலாளர் கோவிந்தன் நன்றி கூறினார் இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பார்த்திபன்

No comments:

Post a Comment

Post Top Ad