கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை சார்பில் 2022-2023-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு மற்றும் செயல் திட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் திருநாவலூர் வட்டார வேளாண்மை கூட்டம் அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆத்மா குழு தலைவருமான திரு கே வி முருகன் அவர்களின் தலைமை தாங்கினார் இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் வைத்தார் பின்னர் பயனாளிகளுக்கு உளுந்து மற்றும் விவசாயி இடுப்பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் மருத பாண்டி முருகன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமாரசாமி முருகானந்தன் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் அம்மாசி ராஜி மற்றும் ஆத்மா குழு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்
- கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை செய்தியாளர் பார்த்திபன்.
No comments:
Post a Comment