கலைஞர் கருணாநிதி 103வது பிறந்தநாள் விழா காலை உணவு வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 3 June 2026

கலைஞர் கருணாநிதி 103வது பிறந்தநாள் விழா காலை உணவு வழங்கி கொண்டாட்டம்.

 


திமுக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள், பயணிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஆர். வசந்தவேல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் பொதுமக்களுக்கு நேரடியாக காலை உணவுகளை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர திமுக செயலாளர் டேனியல்ராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் வைத்தியநாதன், முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு கேக் வழங்கப்பட்டது.


கலைஞரின் சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் உறுதியேற்றுக் கொண்டனர். விழாவில் ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று கலைஞரின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad